சத்தியமங்கலம் அருகே புளியமரத்தில் கார் மோதி 4 பேர் பலி

சத்தியமங்கலம் அருகே புளியமரத்தில் கார் மோதி 4 பேர் பலி

சத்தியமங்கலம் அருகே சாலையோர புளியமரத்தில் சொகுசு கார் மோதியதில் 4 பேர் பலியாகினர். 
Published on


சத்தியமங்கலம் அருகே சாலையோர புளியமரத்தில் சொகுசு கார் மோதியதில் 4 பேர் பலியாகினர். 

ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் காரில் சத்தியமங்கலம் வந்துவிட்டு பங்களா புதூர் திரும்பிக் கொண்டிருந்தனர். 

அப்போது, சத்தியமங்கலம் அடுத்த வேடசின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சாலையோர புளியமரத்தில் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த அனைவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com