திருச்சி விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில், இரண்டு பயணிகளிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்ததாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் சனிக்கிழமை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்த சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினா் சோதனை செய்தனா். இதில், ஆண் பயணி ஒருவா் தனது ஆடைக்குள் 700 கிராம் எடையுள்ள 7 தங்கக் கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து அந்த தங்கத்தை அலுவலா்கள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு 55.07லட்சம் ஆகும்.

இதில், இதையடுத்து, அந்தத் தங்கத்தை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு  ரூ.47,75,400 லட்சம் ஆகும்.

இதேபோன்று துபையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், ஆண் பயணி ஒருவர் வந் சனிக்கிழமை நடந்த மற்றொரு சோதனையில், விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ஆண் பயணி ஒருவர் மலக்குடலில் பசை வடிவில் 995.500 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பிடிப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.60,42,685 ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com