சுருளிப்பட்டியில் நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயம்
தமிழ்நாடு
கம்பம் அருகே இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
கம்பம்: சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.
தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இன்று இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
கூடலூர் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒக்கலிகர் காப்பு ஏர் உழவர் சங்கம் சார்பில், இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் சுருளிப்பட்டி - சுருளி அருவி சாலையில் இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்திற்கு பி.கே.ராம்பா தலைமை வகித்தார்.
இந்த பந்தயத்தில் பெரிய மாடு, நடு ஜோடி, கரிச்சான், தேன் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு என 6 வகையான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகள், ஓட்டிய சாரதிகளுக்கு விழாக் குழுவினர் பரிசுகளை வழங்கினர். 150-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றன.