
காங்கயம்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த ஓட்டுநர் உள்ளிட்ட 11 பேர் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியில் இருந்து புதன்கிழமை அதிகாலை கூலி வேலைக்காக ஆள்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டம், வெப்படை பகுதியை நோக்கி வேன் ஒன்று புறப்பட்டு காங்கயம் வழியாக ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தபோது புதன்கிழமை காலை 7 மணியளவில் காங்கயம், பழையகோட்டை சாலை, வாய்க்கால்மேடு பகுதி தனியார் பள்ளி அருகே உள்ள சாலை வேகத் தடையில் ஏறி, எதிர்பாராதவிதமாக சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இத்தில் வேனில் பயணம் செய்த 11 பேர் சாலையில் சிதறி விழுந்தனர்.
இதையும் படிக்க | கம்பம் அருகே இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்
இந்த சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்தவர் ஒடி வந்து சாலையில் காயங்களுடன் இருந்த அனைவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 11 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்த விபத்து குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





