அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவர் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தது வைரலாகியிருந்தது.
இந்த புகைப்படத்தை விட, அதன் கீழே நேரத்தைக் குறிப்பிட்டிருந்ததுதான் பேசுபொருளாகியிருந்தது. அது மட்டுமல்ல, வாழ்த்துக்குப் பின்னால் ஒரு கண் போன்ற புள்ளியும் இடம்பெற்றிருக்கிறது. இதற்கெல்லாம் அர்த்தங்கள் என்ன என்பதை இளசுகள் நெட்டில் துலாவத் தொடங்கிவிட்டார்கள்.
அதாவது, முதல்வர் விஜய் கேக் உடன் நிற்கும் அந்த புகைப்படம் 00:00 என்று சரியாக 12 மணிக்கு கொண்டாடப்பட்டதைக் குறிக்கும் வகையில் த்ரியா பதிவு போடப்பட்டிருந்ததை யாரும் கவனிக்கத் தவறவில்லை.
டிஜிட்டல் கடிகாரத்தில் 00:00 என்பது நள்ளிரவு 12 மணி என்பதைக் குறிக்கும். இரு ஒரு நாளில் முந்தைய நாள் முடிந்து புதிய நாள் தொடங்கும் தருணம் என்பதைக் காட்டுகிறது.
அது மட்டுமல்ல, இந்த நேரம் குறித்து சில நம்பிக்கைகளும் உள்ளன. ஒரு உறவில், இது புதிய வாழ்வின் ஆரம்பத்தைக் குறிப்பதாகவும், அளவில்லாத காதலையும், இரண்டு உயிர்கள் இணைவதையும் குறிக்குமாம். இதனை தேவதை எண்கள் என்றும் கூறுவார்களாம். இரண்டு பேர் தங்களது வாழ்வில் ஆழ்ந்த, எல்லையற்ற அன்பைக் கொண்டிருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தவும் இந்த எண்ணைக் குறிப்பிடுவார்களாம்.
புதிய ஆரம்பம் - ஒருவர் வாழ்க்கையில் பழைய கவலைகள் முடிவுக்கு வந்து, புதிய அத்தியாயம் தொடங்கப் போவதையும் இது குறிப்பதாக நம்பப்படுகிறது.
முடிவில்லாத - பூஜ்ஜியம் பூஜ்ஜியம் : பூஜ்ஜியம் பூஜ்ஜியம் என்பது முடிவில்லாத எண்ணாக உள்ளது. இது ஆற்றல், பிரபஞ்சம், போன்றவற்றையும் பிரதிபலிப்பதாகக் கூறுகிறார்கள். இந்த உலகின் முழு ஆசிர்வாதத்தைப் பெற்ற தருணம் என்றும் சிலர் இது குறித்துப் பதிவிட்டிருக்கிறார்கள்.
எனவே, 00:00 என்று த்ரிஷா சரியாக 12 மணிக்கு கேக் வெட்டியதைக் குறிப்பிட்டிருந்தாலும், சமூக ஊடகங்களில் இது பற்றி மிகப்பெரிய ஆராய்ச்சியே நடந்து வருகிறது.
அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்திருப்பது இந்த எண் மிக அழகிய காதலை வெளிப்படுத்தும் எண்ணாகவும் கொண்டாடப்படுகிறதாம். காதல், அன்பு என எதையும் தெரியாதவர்கள், இது வெறும் 12 மணியைக் குறிக்கிறது என்று சொல்லிக் கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது மட்டுமல்ல எல்லாவற்றையும் அர்த்தமுள்ளதாக்கும் அந்த நபருக்கு, பிறந்தநாள் வாழ்த்துகள் என்று பதிவிட்டு, இதயம், நீல நிறக் கண் வடிவம், அதனைத் தொடர்ந்து நேரத்தைக் குறிப்பிடும் 00.00 என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நீல நிறக் கண் வடிவம் போன்ற எமோஜி, கண் திருஷ்டி அல்லது கெட்ட பார்வையில் இருந்து பாதுகாப்பு என்பதைக் குறிக்கும் சின்னமாம்.
ஹிந்து வழக்கத்தில் கண் திருஷ்டி என்பது ஒரு நல்ல விஷயத்தைப் பார்த்து பலரும் கண் வைத்தால், அதனால் கண் படுதல் ஏற்படும். திருஷ்டி ஏற்படும் என்பார்கள். எனவேதான் பலரும் இந்த நீல நிறக் கண் போன்ற தாயத்தைக் கூட கழுத்தில் அணிந்திருப்பார்கள். இந்த கண் எமோஜியைத்தான் த்ரிஷா வைத்திருக்கிறாராம்.
பலரும் தங்கள் புகைப்படங்கள் போன்ற பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிடும்போது, அதனால் கண் திருஷ்டி ஏற்படக் கூடாது என்பதற்காக, மற்றவர்கள் பொறாமை, நம்மைத் தாக்கக் கூடாது என்பதற்காக இந்த எமோஜியை சேர்ப்பார்களாம். இதைத்தான், தன்னுடைய பதிவிலும் த்ரிஷா சேர்த்திருக்கிறார்.
இந்த நீல நிறக் கண் நம்பிக்கை, ஏதோ ஓரிடத்தில் உள்ள வழக்கம் இல்லையாம். உலகம் முழுவதும் பல நாடுகளிலும் இந்த நீல நிறக் கண் குறித்த பல நம்பிக்கை, பயன்பாடு உள்ளதாம்.
Summary
It is reported that '00:00'—which precisely marks midnight—has multiple meanings.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் பாஜகவின் ஜெராக்ஸ் மாதிரி செயல்படுகிறார்: மு.க.ஸ்டாலின் விமர்சனம்

கோடை வெய்யில்... என்ன சாப்பிட வேண்டும்?
வைபவ் சூர்யவன்ஷியை கண் திருஷ்டியிலிருந்து காப்பாற்றுங்கள்! - ரவி அஸ்வின்

நீட் மறுதேர்வு: வினாத்தாள் கசியாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? - அகிலேஷ் யாதவ்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



