சென்னையில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.


சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கொச்சி மற்றும் பெங்களூருவை சேர்ந்த வழக்கு தொடர்பாக ஜவுளி நிறுவன உரிமையாளரின் வீடு, அவரது நிறுவனங்களிலும், ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகின்றது.
சென்னை பட்டாளம், தி.நகர், வேப்பேரி, கோபாலபுரம், நுங்கம்பாக்கம், மண்ணடி உள்ளிட்ட இடங்களில் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடைபெற்று வருகின்றது.
சென்னை ஆயுதப்படை போலீசாரின் பாதுகாப்புடன் இரு மாநிலங்களை சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக திமுக எம்பி ஜெகத்ரட்சகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...