‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மழை நீரில் மிதக்கும் வீடுகள்: கொடுந்தொற்று ஏற்படும் அபாயம்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அடையக்கருங்குளம் ஊராட்சியில் வடிகால் வசதியின்றி தேங்கிய மழை நீர் தேங்கியதால் செல்வதற்கு பாதையின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள் சிரமத்திற்குள்ளா

News image

வீடுகளைச் சுற்றி தேங்கியுள்ள கழிவு நீர் மற்றும் மழை நீர்.

Updated On :17 நவம்பர் 2023, 9:03 am

DIN

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே அடையக்கருங்குளம் ஊராட்சியில் வடிகால் வசதியின்றி தேங்கிய மழை நீர் தேங்கியதால் செல்வதற்கு பாதையின்றி நோய்த்தொற்று ஏற்படும் அபாயத்தில் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஒன்றியம், அடையக்கருங்குளம் ஊராட்சிக்குள்பட்டது அகஸ்தியர்பட்டி, விநாயகர் காலணி 3-ஆவது தெரு. இதில் சுமார் 100 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் வடிகால் வசதிகள் இல்லாததால் வீடுகளின் கழிவு நீர் மற்றும் மழை நீர் போன்றவை தெருக்களில் தேங்கும் நிலை உள்ளது. 

Story image

வடிகால் வசதியில்லாததால் மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து தெருக்களில் தேங்கியுள்ளது.

இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் அந்தப் பகுதியில் மழை நீர் தேங்கியது. மழைநீரும் கழிவு நீரும் சேர்ந்து முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளதால் நடக்க வழியில்லாத நிலை உள்ளதோடு கொசுக்கள் உருவாகி நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

ஆண்டுதோறும் மழைக்காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்கிவரும் நிலையில் ஊராட்சி சார்பில் மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற்ற வடிகால் வசதி செய்து தரப்படவில்லை.

எனவே, போர்க்கால அடிப்படையில் தேங்கிய நீரை வெளியேற்றுவதோடு, வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.