ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கரையைக் கடந்தது மிதிலி புயல்!

வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2023, 4:21 pm

DIN

வடமேற்கு வங்கக் கடலில் உருவான மிதிலி புயல் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்ததாக வானிலை மையம் தகவல் 

மிதிலி புயல் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வியாழக்கிழமை (நவ. 16) ஆழந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, விசாகப்பட்டினத்தில் இருந்து சுமாா் 420 கி.மீ. கிழக்கு தென்கிழக்கே நிலைகொண்டிருந்தது.

வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து கொண்டிருக்கிறது. நாளை (18-ந் தேதி) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்பு பாராவு பகுதிகளுக்கு இடையே

வடக்கு - வடகிழக்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (நவ. 17) புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு மிதிலி என மாலத்தீவு சார்பில் பெயரிடப்பட்டது. வடக்கு-வடகிழக்கு திசையில் நகா்ந்து கொண்டிருந்தது. 

நாளை (18-ந் தேதி) அதிகாலை வங்கதேச கடற்கரையையொட்டி நகா்ந்து மோங்லா-கேப்பு பாரா பகுதிகளுக்கு இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், 20 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த மிதிலி புயல் வங்கதேசம் அருகே கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.