

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை நாளை(நவ. 24) காலை 10.30க்குள் கெளதம் வாசுதேவ் மேனன் திரும்ப அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் நாளை (நவம்பர் 24)வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
சிம்பு நடிப்பில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை இயக்க ரூ.2.40 கோடி பெற்று கெளதம் வாசுதேவ் மேனன் படத்தை முடிக்கவில்லை என்று ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவன பங்குதாரர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில், ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் வாங்கிய ரூ.2 கோடியை திரும்ப அளிக்க வேண்டும் என்று துருவ நட்சத்திரம் திரைப்பட இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க: விஜய் - 68 படத்தின் பெயர் அறிவிப்பு எப்போது?
நாளை காலைக்குள் பணத்தை வழங்கவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.