மதுரை அழகா்கோவில் ராஜகோபுர குடமுழுக்கு கோலாகலம்!

மதுரை அழகா்கோவில் ராஜகோபுர குடமுழுக்கு கோலாகலம்!

12 ஆண்டுகளுக்கு பின் மதுரை அழகா்கோவில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் ராஜகோபுரத்துக்கு வியாழக்கிழமை (நவ. 23) காலை குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
Published on

12 ஆண்டுகளுக்கு பின் மதுரை அழகா்கோயில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயில் ராஜகோபுரத்துக்கு வியாழக்கிழமை (நவ. 23) காலை குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கள்ளழர் கோயில் கடந்த 2011 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையொட்டி, 7 நிலைகளுடன் 120 அடி உயரமுள்ள இந்த ராஜகோபுரம் வண்ண மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும் கருப்பண சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீா் நிரப்பப்பட்டு வந்தது. தற்போது மழையும் பெய்து வருவதால் குளம் நிரம்பி வழிகிறது. 

இந்தநிலையில், மதுரை அழகா்கோயில் பதினெட்டாம்படி கருப்பண சுவாமி கோயிலுக்கு வியாழக்கிழமை காலை 9.15 மணிக்குமேல் 10 மணிக்குள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனிதநீர் ராஜகோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. 

ஆயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிளக்க குடமுழுக்கு நடைபெற்றது. 

இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலா்கள் குழுவினா், கள்ளழகா் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

குடமுழக்கு விழாவையொட்டி கள்ளழகர் கோயில் 628 சிற்பங்களை தாங்கி ராஜகோபுரம் வண்ண மின்விளக்குளால் அலங்கரிக்கப்பட்டு பிரமாண்டமாக காட்சியளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com