
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் கோவை மாவட்ட மக்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து தொடர்மழை பெய்து வருவதால் பழுதடைந்த கூரை வீடுகள், மண்சுவர் வீடுகள், சிதிலமடைந்த கட்டடங்கள் மற்றும் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வசித்து வரும் பொது மக்கள், மழையினால் ஏற்படும் பாதிப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் வெள்ளபெருக்கு அபாயம் உள்ளதால் பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு குளிக்கவோ, சுயபடம் எடுக்கவோ அருகில் செல்ல வேண்டாம் என்று கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.