
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அதன் நிறுவன நாளை கொண்டாடும் வகையில் சிறப்பு ஒரு நாள் சலுகையை அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் 3 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), பேடிஎம், வாட்ஸ்அப் அல்லது ஃபோன்பே ஆகியவற்றைப் பயன்படுத்தி, ஒற்றை பயண இ-க்யூஆர் பயனச் சீட்டுகளை வாங்கும் பயணிகளுக்கு, ரூ.5 என்ற பயணக் கட்டண சலுகையை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிங்கார சென்னை அட்டை, மெட்ரோ பயண அட்டை, சிஎம்ஆர்எல் மொபைல் ஆப் ஸ்டோர் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆர் ஆகிய பயணச் சீட்டுகளுக்கு இச்சலுகை பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சுந்தரவன காப்பக வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புப் பணி!
இந்த ஒற்றை பயண இ-க்யூஆர் பயணச் சீட்டு சிறப்பு சலுகை மூலம், பயணிகள் விலை குறைவான பயண அனுபவத்தை அனுபவிக்க முடியும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.