ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

குஷ்பு மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக புகார்!

சேரி மொழியை அவமதித்ததற்காக நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் தெரிவித்துள்ளது. 

News image

நடிகை குஷ்பு

Updated On :24 நவம்பர் 2023, 8:14 am

DIN

சேரி மொழியை அவமதித்ததற்காக நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி புகார் தெரிவித்துள்ளது. 

சமீபத்தில் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒருவரின் கருத்துக்கு பதில் அளித்த நடிகை குஷ்பு, 'உங்களைப் போல சேரி மொழியில் எல்லாம் பேச முடியாது' என்று கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

இதையடுத்து அவர் தனது கருத்துக்கு ஒரு விளக்கம் அளித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், 'சேரி' என்றால் பிரெஞ்சு மொழியில் அன்பு என்று பொருள். நான் அதை கிண்டல் செய்யும் வகையில் பதிவிட்டிருந்தேன்' என்று கூறினார். இதற்குமே கடும் விமர்சனங்கள் எழுந்தன. 

குஷ்புவின் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸின் பட்டியலினப் பிரிவு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் அவர் பொது மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. 

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் குஷ்பு மீது இன்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், குஷ்பு மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.