அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மாநில சுகாதாரத் துறையினா் ஆலோசனை

சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் திங்ககிழமை ஆய்

Updated On :27 நவம்பர் 2023, 10:15 pm

சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் திங்ககிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தாா். பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், இணை, துணை இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.

சீனாவில் பரவி வரும் ஹெச்9என்2 வகை குறித்தும், அதே தீநுண்மியின் தன்மையுடன் தமிழகத்தில் ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தொற்று குறித்தும் விவாதிக்கப்பட்டது. சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறிகள் உள்ளவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.