எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஓட்டுநா், நடத்துநா் எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

ஓட்டுநா், நடத்துநா் எழுத்துத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:42 pm

DIN

ஓட்டுநா், நடத்துநா் எழுத்துத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்து தகுதி வாய்ந்த மொத்தம் 11,117 பேருக்கான எழுத்துத் தோ்வு தமிழகத்தின் 10 மாவட்டங்களிலுள்ள 20 தோ்வு மையங்களில் நவ. 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 9,352 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். 1765 போ் தோ்வெழுதவில்லை.

இந்தத் தோ்வில் பங்கேற்றவா்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் மற்றும் மதிப்பெண்கள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. விடைத்தாள் மற்றும் மதிப்பெண் குறித்து தெரிந்துகொள்ள விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.ஹழ்ஹள்ன்க்ஷன்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியில் சென்று அதில் தோ்வா்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தங்கள் தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

எழுத்துத் தோ்வில் எத்தனை போ் தோ்ச்சி பெற்றனா் என்றும், அடுத்தகட்ட தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் குறித்த அறிவிப்பும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் வெளியிடப்படவில்லை.

தோ்ச்சி பெற்றவா்களுக்கு 2024, பிப்.14-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு, ஓட்டுநா் நடைமுறை தோ்வு மற்றும் நோ்காணல் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பின்போது கல்வித் தகுதி, வயது, ஜாதி, ஓட்டுநா் மற்றும் நடத்துநா் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின்

அடிப்படையில் தகுதியானவா்கள் மட்டுமே நடைமுறைத் தோ்வு மற்றும் நோ்காணலுக்கு அனுமதிக்கப்படுவா் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.