
புதுச்சேரியில் பொதுஇடங்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, தொற்றுநோய்களில் இருந்து பாதுகாத்துகொள்ள பொதுஇடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். நாள்பட்ட நோய் உள்ளோர் காய்ச்சல், சளி, இருமல், சுவாசிப்பதில் பாதிப்பு இருந்தால் சிகிச்சை பெற வேண்டும்.
இருமல், சுவாச பாதிப்பு போன்றவை இருந்தால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகி சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் புதிய வகையான தீநுண்மி பாதிப்பு தீவிரமாகப் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் ஏற்படும் நுரையீரல் தொற்று, சுவாச பாதிப்புகளைக் கண்காணிக்குமாறு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.