அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவெடுக்கும்: அண்ணாமலை

அதிமுகவுடனான கூட்டணி குறித்த எனது முடிவை கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன், இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

News image
Updated On :5 அக்டோபர் 2023, 8:16 am

DIN

அதிமுகவுடனான கூட்டணி குறித்த எனது முடிவை கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டேன், இனி அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

சென்னையில் பாஜக மாநில, மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. 

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, 'கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும், அது அவர்களின் விருப்பம், அதைப் பற்றி நாம் ஏன் பேச வேண்டும். 

கூட்டணி பிரச்னையில் எனது முடிவை பாஜக தலைமையிடம் நான் ஆழமாக தெரிவித்துவிட்டேன். இனி கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும்' என்று கூறினார்.

மேலும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, 'தமிழ்நாட்டில் 39 தொகுதிகளுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்படும். 

'என் மண், என் மக்கள்' நடைப்பயணம் முடிவடையும் நிறைவு நாளில் வருகிற ஜனவரி இறுதியில் பிரதமர் மோடி, சென்னையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். 

தேர்தல் வருவதையொட்டி அடுத்த 7 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக எண்ணிக்கையில் பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும்' என்று பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.