சோதனை மூலம் மக்கள் பணம் வெளிவருகிறது: அண்ணாமலை
தமிழகத்தில் அரசு இயந்திரமே வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.


தமிழகத்தில் அரசு இயந்திரமே வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் பாஜகவின் மையக் குழுக் கூட்டம் இன்று (அக். 10) நடைபெற்றது. கடந்த அக். 5ஆம் தேதி நடைபெற்ற பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தைத் தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மையக்குழு கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுக - காங்கிரஸ் கூட்டணியை எதிர்க்க பாஜக மையக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு இயந்திரமே வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது.
பொதுப்பணம் தனிப்பட்ட பணமாக பல இடங்களில் மாறியுள்ளது. இது சோதனையின் மூலம் வெட்டவெளிச்சமாகியுள்ளது. அமலாக்கத் துறை, வருமான வரித் துறை மூலம் மக்களின் பணம் வெளியே வருகிறது.
கட்சியின் கட்டமைப்பை இன்னும் வலிமைப்படுத்த உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்றும் நாள்கள் உள்ளன எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...