உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு!

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் கடந்த ஆக. 12-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமாா் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. தொடா்ந்து, ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ள முதன்மை அமா்வு நீதிமன்றம் தான், ஜாமீன் மனு மட்டுமல்லாமல், முழு வழக்கையும் விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டது.

இந்த வழக்கில் சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி, அமலாக்கத் துறை வாதங்களை ஏற்று, ஜாமீன் கோரி அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை  தள்ளுபடி செய்து தீா்ப்பளித்தாா்.

இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவசர வழக்காக வழக்குரைஞர் என்.ஆர். இளங்கோ வைத்த கோரிக்கையை நீதிபதி ஜெயச்சந்திரன் ஏற்றார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுக்கள் இதுவரை இரண்டு முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com