காவிரி நீர்: தமிழக அரசை கண்டித்து அக். 16 பாஜக உண்ணாவிரதம்

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அக்டோபர் 16-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.
அண்ணாமலை (கோப்புப்படம்)
அண்ணாமலை (கோப்புப்படம்)

காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அக்டோபர் 16-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழக பாஜக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:

“கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி முயற்சியால் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக எந்தப் பிரச்னையும் இல்லாமல், தமிழகத்துக்கு காவிரி நதி நீர் கிடைத்து வந்தது.

கர்நாடக மாநிலத்தில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், காவிரி நதி நீரைத் திறந்து விடாமல், திட்டமிட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது.

கர்நாடக அணைகளில் 80 சதவிகிதத்துக்கும் அதிகமாக தண்ணீர் இருந்தும் காங்கிரஸுடன் கூட்டணியில் இருக்கும் திமுக அரசு தண்ணீரை பெற்று தராமல் போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது.

இந்த நிலையில், பாஜக சார்பில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெறும்.

இதில், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மாநிலப் பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம், மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com