நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு அக்.10 ஆம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்தநிலையில், கப்பல் போக்குவரத்து 12 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
தேதியில் மீண்டும் மாற்றம்
நாகை துறைமுகத்திலிருந்து காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து செவ்வாய்க்கிழமை(அக்.10) தொடங்க இருந்த நிலையில், மீண்டும் பயணத் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | பல மாநிலங்களில் பிஎஃப்ஐ-க்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ சோதனை
மாற்றம் ஏன்?
மத்திய அமைச்சர்கள் கூடுதலாக நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் தேதி மாற்றம் எனக் கூறப்படுகிறது.
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.