சென்னை வந்த சோனியா காந்தி, பிரியங்கா காந்தி!

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர்.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்.
சோனியா காந்தி, பிரியங்கா காந்தியை வரவேற்ற முதல்வர் மு.க. ஸ்டாலின்.

திமுக மகளிர் உரிமை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி சென்னை வந்தனர். முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுக மகளிா் அணி சாா்பில் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறாா். திமுக துணை பொதுச் செயலா் கனிமொழி முன்னிலை வகிக்கிறாா்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி, தேசியவாத காங்கிரஸ் செயல் தலைவா் சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சுஷ்மிதா, பிகாா் அமைச்சா் லேஷி சிங், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் சுபாஷினி அலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மகளிரணி பொதுச் செயலா் ஆனி ராஜா உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் பல்வேறு பெண் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இதையொட்டி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) சென்னை வந்தனர். முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் அவர்களை வரவேற்றனர். 

5 ஆண்டுகளுக்குப் பின் சோனியா காந்தி தமிழ்நாடு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com