அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்காத திமுக அரசைக் கண்டித்து அக்.18 முதல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அனைத்து தாய்மார்களுக்கும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட நிலையில், 1.60 கோடி விண்ணப்பங்களை பெற்று, அதிலும் கூட 56 லட்சம் விண்ணப்பங்களை நிராகரித்துவிட்டனர்.
வாக்குறுதியை நிறைவேற்ற ஏற்பட்ட கால தாமதத்தால் ஏற்கனவே ஏமாற்றத்தில் இருந்த தாய்மார்கள், திமுக அரசின் துரோக நடவடிக்கையால் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திமுக அரசின் மோசடித்தனத்தை கண்டித்து கிராமப்புறங்களை அதிகம் கொண்ட விழுப்புரம் பெருங்கோட்ட பகுதியில், 18ஆம் தேதி முதல் திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருவள்ளூர், கங்கைகொண்டான், ஸ்ரீபெரும்புதூர், முடிச்சூர், செய்யூர், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் மாநில செயலாளர் வினோஜ் ஒருங்கிணைப்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கார் பழுதுபார்க்கும் கடையில் தீ! 3 சொகுசு கார்கள் எரிந்து நாசம்! | Salem

போருக்கு இடையே! இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!
மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் லெஜண்ட் சரவணன்!

தோல்வியுற்ற அணிக்கு கோப்பை வழங்க தீர்ப்பளித்த ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பினால் சர்ச்சை!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

