சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தின் தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை(இன்று) தொடங்கப்பட்டது.
ஸ்ரீ நடராஜர் கோயிலில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 30 அடி உயரத்தில், 30 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது.
இன்று (அக்.15) தொடங்கிய இந்த கொலு வருகிற அக்.24-ம் தேதி வரை நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.
கொலுவில் ஸ்ரீ நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார் 3500 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர்.
நவராத்திரி கொலு குறித்து கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான உ.வெங்கடேச தீட்சிதர், ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரினாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.