கொத்தமங்கலம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 1500-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் நேற்று இரவு வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும் வழக்குரைஞர் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 100 பாக்கு மரங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு காவல் துறையினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.