நியாயவிலைக் கடைகளில் விரைவில் கருவிழி பதிவு: அமைச்சர் சக்கரபாணி 

கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள்
உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் முக்கிய அறிவிப்புகள்
Published on
Updated on
2 min read

சேலம்: இன்னும் இரண்டு மாதங்களில் அனைத்து நியாய விலை கடைகளிலும் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரும் என சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில்  நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு உணவு மற்றும் உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.

அப்போது சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் செயல்பாடு, மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பணிகள், பயனாளிகள் விபரம் மேலும் பொது விநியோக முறையில் உள்ள குளறுபடிகள் குறித்து தனித்தனியே ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் ஏற்கனவே தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போன்று பொது விநியோகத் திட்டத்தை சீரமைத்து மக்களுக்கு தரமான பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் முதல் கட்டமாக அனைத்தும் நியாய விலைக் கடைகளிலும் கருப்பு மற்றும் பழுப்பு அரிசிகளை நீக்கி தரமான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தேர்தல் அறிக்கையை தெரிவித்தது போன்று குடும்ப அட்டைக்காக விண்ணப்பித்துள்ளவர்களுக்கு 15 நாள்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அதன்படி இதுவரை 14 லட்சம் பேருக்கு  புதிய குடும்ப அட்டை புதிதாக வழங்கப்பட்டுள்ளது என்றும் குடும்ப அட்டை நகல் பெறுவதற்கு தபால் துறை மூலம் விண்ணப்பித்தாலே போதும் ஆன்லைன் மூலம் குடும்ப அட்டை நகல் வழங்கும் சிறப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார் 

தற்போது பொது விநியோக கடைகளில் பயோமெட்ரிக் முறை அவ்வப்போது செயல் இழப்பதால் பொருட்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்படுவதாக வந்த புகாரினையடுத்து அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் இரண்டு மாதத்திற்குள் 36,000 ரேஷன் கடைகள் மூலம் கருவிழி பதிவின் மூலம் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார் 

தொடர்ந்து அவர் பேசும்போது ரேஷன் கடைகளுக்கு வர முடியாத மாற்றத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் 3 லட்சம் பேருக்கு இருக்கும் இடத்திலேயே ரேசன் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தை பொறுத்தமட்டில் 103 திறந்தவெளி நெல் அடுக்கு மையங்கள் தற்போது பாதுகாக்கப்பட்டு 211 இடங்களில் குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் 

டெல்டா மாவட்டங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பெட்டில் 4 லட்சம் மெட்ரிக் டன் உணவு பொருட்கள் அடுக்கி வைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார் 

இந்த கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com