
அன்னூர்: கோவை மாவட்டம், அக்ரஹாரசாமக்குளத்தில் கழிவுகளை கொட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அக்ரஹாரசாமக்குளத்தில் உள்ள 165 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியில் அக்ரஹாசாமக்குளம் ஏரி பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள், மாணவர்கள், விவசாயிகள் இணைந்து பல்வேறு புணரமைப்பு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அக்ரஹாரசாமக்குளத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவு மூட்டை.
இந்த நிலையில், மர்மநபர்கள் யாரோ செவ்வாய்க்கிழமை இரவு லாரிகள் மூலம் காற்றில் மாசு ஏற்படுத்தும் தெர்மாகோல் கழிவுகளை பெரிய சாக்கு மூட்டைகளில் கொண்டு வந்து மூன்று இடங்களில் கொட்டிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி அக்ரஹாரசாமக்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் எரி பாதுகாப்பு அமைப்பினர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.