காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான்: ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல் 

காஸா மருத்துவமனை மீதான ராக்கெட் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் எனவும் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார். 
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான்: ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தகவல் 

டெல் அவிவ்: காஸா நகரில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது செவ்வாய்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையைில், காஸா மருத்துவமனை மீதான ராக்கெட் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் எனவும் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார். 

கடந்த 7-ஆம் தேதி ஹமாஸ் படையினா் நடத்திய திடீா் தாக்குதலுக்கு இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது. இதுவரையில் 2,778 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டும், 9,700 போ் காயமடைந்தும் உள்ளனா்.

காஸாவை முழுவதுமாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல், வடக்கு காஸாவில் உள்ள மக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற வேண்டும் என்று எச்சரித்தது. உயிரைப் பாதுகாத்து கொள்ள சுமாா் 10 லட்சம் போ் வெளியேறி தெற்கு காஸாவுக்கு நடைப்பயணமாகச் சென்று தெற்கு காஸாவில் தஞ்சும் புகுந்து வருகின்றனா்.

இந்நிலையில், தெற்கு காஸாவின் ராஃபா, கான் யூனிஸ், மத்திய காஸா பகுதிகளிலும் இஸ்ரேல் செவ்வாய்க்கிழமை குண்டுகளை வீசி தொடா் தாக்குதல் நடத்தியது.

இதில் காஸா சிட்டியில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனையில் மருத்துவ உதவிகளுக்காக தஞ்சம் அடைந்திருந்த பாலஸ்தீனா்கள் 500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக காஸா சுகாதார அமைச்சா் தெரிவித்தாா். 

மருத்துவமனையில் அப்பாவி மக்கள், நோயாளிகள் கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

காஸாவில் இருந்து எகிப்துக்கு வெளியேற இருந்த ஒரே ராஃபா எல்லையோர வழித்தடமும் சேதமானது. உணவு, குடிநீா், மின்சாரம், மருத்துவ வசதி இல்லாமல் தெற்கு காஸாவின் தெருக்களில் லட்சக்கணக்கான பாலஸ்தீனா்கள் தஞ்சம் புகுந்துள்ளனா். 

இந்த சூழலில், காஸாவில் உள்ள மருத்துவமனைக்கு எதிராக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் இன்னும் பரிசீலனையில் இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்ம் டேனியல் ஹகாரி தெரிவித்துள்ளார்.

காஸாவில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஹமாஸ் நடத்திய தாக்குதல் எனவும்,  நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றதற்கான காரணம் குறித்து தனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேலிய வெளியுறவு மந்திரி எலி கோஹன் செவ்வாயன்று இஸ்ரேலின் தற்காப்பு மற்றும் ஹமாஸின் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். இஸ்ரேலிய தற்காப்புப் படைகள் பன்முக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

நேற்று செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் கோஹன், காஸா இனி இஸ்ரேலுக்கு அல்லது வேறு யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்காது என்று உறுதியாக அறிவித்தார். 

காஸாவிலோ அல்லது வேறு எந்த இடத்திலோ ஹமாஸ் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதைத் தடுப்பதே இஸ்ரேலின் நோக்கமாகும். ஹமாஸ் அமைப்புக்கு அதிகாரம் இருக்கும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம். குழந்தைகளைக் கொல்வது, அப்பாவி பெண்களை சித்திரவதை செய்வது மற்றும்  கொலை உள்ளிட்ட கொடூரமான வன்முறைச் செயல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார். 

தற்போதைய மோதலை இஸ்ரேல் தொடங்கவில்லை. அவர்கள் எங்களை இந்தப் போரில் நுழைய வற்புறுத்தினார்கள். ஆனால் ஹமாஸின் ஆக்கிரமிப்புக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அமைச்சர் கோஹன் கூறினார்.

ஹமாஸை எதிர்த்துப் போராடும் இஸ்ரேலின் முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்றும், அப்பாவி பொதுமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிக்கும்.

உடனடி போர்நிறுத்தம் மற்றும் நீண்டகால இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

மேலும், இஸ்ரேலின் போர் ஒரு நியாயமான போர். நாங்கள் தற்காப்புக்காக செயல்படுகிறோம், அச்சுறுத்தல்களை நீக்குகிறோம், மேலும் எங்களைக் கொன்று அழிக்கும் நோக்கம் கொண்ட எதிரிகளை அகற்றுகிறோம். காஸா மக்களை அலட்சியப்படுத்தியதற்காக, இதுவரை நாங்கள் 1,000 பயங்கரவாதிகளை ஒழித்துள்ளோம். 

எங்கள் பகுதியில் அமைதியை சீர்குலைப்பதும், பயங்கரவாதம் மற்றும் அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. தற்போது, அவர்கள் காஸா மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர்கள் அவர்களை மனிதப் பாதுகாப்பாகப் பயன்படுத்துகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

"நாம் அவர்களை மனிதாபிமானமற்ற அல்லது விலங்குகள் என்று அழைக்க முடியாது. விலங்குகள் கூட இப்படி செயல்படாது. ஒரே வரையறை பேய்கள்" என்று கோஹன் தெரிவித்தார்.

இந்த நிலையில், காஸா நகரில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது செவ்வாய்கிழமை இரவு வான்வழித் தாக்குதல் நடத்தியது இஸ்ரேல்தான் எனவும் தாக்குதலை நடத்திவிட்டு ஹமாஸ் மீது இஸ்ரேல் அதிபர் பழி சுமத்துவதாக ஐ.நா.வுக்கான பாலஸ்தீன தூதர் தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீன அதிபர் கண்டனம்
காஸா மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மருத்துவமனை மீதான தாக்குதலில் மீதான தாக்குதலில் ஏராளமானோர் பலியான நிலையில் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com