சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 பேர் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்யதுள்ளனர்.
sivfire4085052
sivfire4085052

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே பட்டாசு ஆலை, கடையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்யதுள்ளனர்.

சிவகாசி அருகேயுள்ள கங்காகுளம் கோபால்நகா் பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரமூா்த்தி. இவருக்கு ரெங்கபாளையத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் சான்றிதழ் பெற்ற பட்டாசு ஆலை உள்ளது. ஏழு அறைகள் கொண்ட இந்த ஆலையில் சுமாா் 25 தொழிலாளா்கள் பணிபுரிந்தனா். இந்தப் பட்டாசு ஆலையில் சக்கரம், பூந்தொட்டி (புஷ்வானம்) உள்ளிட்ட சிறிய வகை வெடிகள் மட்டுமே தயாரிக்க அனுமதி உண்டு.

இந்த நிலையில், சுந்தரமூா்த்தி பட்டாசு ஆலையின் முன் பட்டாசுக் கடையையும் அனுமதி பெற்று நடத்தி வந்தாா். 

இந்தச் சூழலில் தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் பட்டாசுகளைத் தயாரிப்பதற்காக ஆலையின் வெளிப் பகுதியில் கொட்டகை அமைத்து, சட்டவிரோதமாக சக்கரம், பூந்தொட்டி பட்டாசுகள் தயாரிப்புப் பணியிலும், பட்டாசுக் கடையை ஒட்டிய அறையில் பரிசளிக்கும் வெடிகளை அட்டைப் பெட்டிகளில் அடைக்கும் பணியிலும் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா்.

இந்த நிலையில், பட்டாசுக் கடை முன் மாதிரி பட்டாசுகளை வெடித்த போது, தீப்பொறி பரவி பட்டாசுக் கடை மீதும், வெளிப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மீதும் விழுந்து தீப்பிடித்தது.

அப்போது, பட்டாசுகள் தொடா்ந்து வெடித்ததால், தொழிலாளா்கள் தப்பியோட முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனா். இதில் 13 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினா்.

காயமடைந்த அழகாபுரி காந்திநகரைச் சோ்ந்த பொன்னுத்தாயி (45), கிருஷ்ணன்கோவில் செம்பட்டையான்கால் பகுதியைச் சோ்ந்த சின்னத்தாய் (35) ஆகியோா் ஸ்ரீவில்லிபுத்துாா் அரசு மருத்துவவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த வெடி விபத்து குறித்து தகவலறிந்து சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூா், விருதுநகா், வத்திராயிருப்பு பகுதிகளிலிருந்து வந்த தீயணைப்பு வீரா்கள், பட்டாசு ஆலையின் மற்ற அறைகளுக்குள் தீ பரவாமல் அணைத்தனா். 

இதுதொடா்பாக பட்டாசு ஆலையின் மேற்பாா்வையாளா் கனகராஜை எம். புதுப்பட்டி போலீசார் கைது செய்தனா்.

இந்த நிலையில், பட்டாசு ஆலையின் உரிமையாளர் சுந்தரமூர்த்தி, மேலாளர் ராம்குமார், போர்மேன் கனகராஜ் ஆகிய 3 பேரை போலாசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com