என்.சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் மறுப்பா? குவியும் கண்டனங்கள்!

என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்புகளில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 
என்.சங்கரய்யா (கோப்புப் படம்)
என்.சங்கரய்யா (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read


என்.சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்புகளில் ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்திட மறுப்பு தெரிவித்துள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதற்கு ஆளுநர் மறுப்பு தெரிவித்துள்ளதற்கு பலர் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில், விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா, படிப்பை பாதியில் கைவிட்டு விடுதலை போராட்ட களத்திற்கு வந்த போராளி. அவர் முடிக்க முடியாத பட்டத்தை இப்போது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப் பட்டது. 

தமிழ்நாடு அரசும் அதனை ஏற்று  டாக்டர் பட்டம் வழங்கப்படும் என அறிவித்தது. மதுரை காமராஜர் பல்கலை கழகமும் அதனை முடிவு செய்து வரும் நவம்பர் 3ஆம் தேதி நேரில் வந்து பட்டம் தருவதாக இருந்தது. ஆனால் ஆளுநர் அதற்கு கையெழுத்திட மறுத்து நிறுத்தியுள்ளார்.

விடுதலை போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என்.சங்கரய்யாவிற்கு பட்டத்தை மறுக்கிறார்கள். அவரால்தான் பட்டத்திற்கு பெருமை என்பதை உணராத கூட்டம்தான், ஆர்.எஸ்.எஸ் கூட்டம் என்பது இதன் மூலம் அம்பலப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com