வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சிகிச்சைக்கு லஞ்சம் தர மறுத்த கைதிகள் பலியா? அன்புமணி கண்டனம்

சென்னை புழல் சிறையில் லஞ்சம் தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.

News image
Updated On :19 அக்டோபர் 2023, 11:58 am

DIN

சென்னை: சென்னை புழல் சிறையில் லஞ்சம் தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்ததாக வெளியான செய்திகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை புழல் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும்  அல்லது சிறைவாழ்க்கை கொடுமைகளில் இருந்து  விடுபடுவதற்கு நினைத்தாலும்  சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க 50,000 ரூபாயும், உள்நோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்கு பரிந்துரைக்க ரூ. 3 லட்சம் முதல் 5 லட்சம் வரையிலும் அங்குள்ள மருத்துவக் குழுவினரால் கையூட்டாக வசூலிக்கப்படுகிறது என்று  ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

கையூட்டு தருவதற்கு வாய்ப்பும் வசதியும் இல்லாத கைதிகள் உண்மையாகவே கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு சிறைக்கு வெளியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் கிடைக்காது. கையூட்டு தர வழியில்லாததால், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்த பல கைதிகள், சரியான நேரத்தில்  உரிய மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்ததாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பது கூடுதல் வேதனையளிக்கிறது. 

சிறைகளில் கையூட்டு தலைவிரித்தாடுகிறது என்பது ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான். ஆனால்,  உயிர்காக்கும் மருத்துவம் அளிப்பதைக் கூட  கையூட்டு தான் தீர்மானிக்கிறது என்பதையும்,  கையூட்டு தருவதற்கு வசதி இல்லை என்பதாலேயே  வாழ வேண்டிய பலர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதையும்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகில் இதை விட கொடிய மனித உரிமை மீறல் இருக்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது.

புழல் மத்திய சிறையில்  கையூட்டு தர மறுத்ததால், மருத்துவ வசதி மறுக்கப்பட்டு  உயிரிழந்தவர்கள் எவ்வளவு பேர்?  என்பது குறித்து  விரிவான விசாரணை நடத்த தமிழக  அரசு உத்தரவிட வேண்டும் என்றும் மருத்துவம் கிடைக்காமல் உயிரிழந்த கைதிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்கவும்  தமிழக அரசு முன்வர வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியிருக்கிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.