சமூக நீதிப் போராளியாகவே அடிகளாரை பார்க்கிறேன்: திருமாவளவன் பேட்டி

போராளியாகவே அடிகளாரை பார்க்கிறேன் என்று பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த விசிக தலைவர் திருமாவளன் தெரிவித்தார். 
சமூக நீதிப் போராளியாகவே அடிகளாரை பார்க்கிறேன்: திருமாவளவன் பேட்டி


மேல்மருவத்தூர்: போராளியாகவே அடிகளாரை பார்க்கிறேன் என்று பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த விசிக தலைவர் திருமாவளன் தெரிவித்தார். 

பங்காரு அடிகளாரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விசிக தலைவர் திருமாவளவன். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலின சமத்துவத்துக்காக ஆன்மீகத் தளத்தில் அடிகளார் ஆற்றிய பணிக்காக அஞ்சலி செலுத்துகிறோம். 

மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டுக்கு வெளியே நிற்க வைக்கின்ற காலத்தில் கோயில் கருவறைக்குள் பூஜை செய்யலாம் என்பதை நடைமுறைப்படுத்தி காட்டியவர் அடிகளார்.

சமூக நீதிப் போராளியாகவே அடிகாளரை பார்க்கிறேன் என திருமாவளவன் தெரிவித்தார். 

அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வந்த இடத்தில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com