பெட்ரோல் குண்டு வழக்கை நீர்த்துப்போகச் செய்ய முயற்சி: ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டு

பெட்ரோல் குண்டு வழக்கை நீர்த்துப்போகச் செய்ய காவல் துறை முயற்சி செய்வதாக ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பெட்ரோல் குண்டு வழக்கை நீர்த்துப்போகச் செய்ய காவல் துறை முயற்சி செய்வதாக ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.

சென்னை கிண்டி சா்தாா்படேல் சாலையில் அமைந்துள்ள தமிழக ஆளுநா் மாளிகை வெளியே புதன்கிழமை மாலை ரெளடி கருக்கா வினோத் என்பவர் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசினார். உடனடியாக பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்களை ரெளடியை பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

"ராஜ்பவனில் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்துவிட்டது.

அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு, மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாமான விசாரணை தொடங்கும் முன்னே கொல்லப்படுகிறது" என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com