மகாராஷ்டிரத்தின் புகழ்பெற்ற ஷீரடி சாய்பாபாவின் சமாதி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
ஒருநாள் பயணமாக மகாராஷ்டிரம் வந்துள்ள பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதன்படி, ஷீரடி சாய்பாபா கோயிலில் அவர் வழிபாடு மேற்கொண்டார்.

கோயில் நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன் மாநில ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஷீரடி கோயிலில் புதிய தரிசன வரிசை வளாகத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, நில்வண்டே அணையைத் திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

மேலும், ஷீரடியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் சுகாதாரம், ரயில், சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு போன்ற துறைகளில் சுமார் ரூ.7,500 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதன்பின்னர், 37-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கோவா செல்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 04) - இன்று வெற்றி யாருக்கு?

லிவ் இன் முறையில் வாழ்பவா்களுக்கும் ஐபிசி பிரிவு 498ஏ பொருந்தும்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

தொழில்நுட்பத்துக்கு கைமாறும் அதிகாரங்கள்
சென்னை - குருவாயூா் விரைவு ரயில் 10 நாள்கள் தாமதமாக இயங்கும்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



