பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மணிமண்டபம்: ஸ்டாலின்

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பசும்பொன் தேவா் நினைவாலயம்.
பசும்பொன் தேவா் நினைவாலயம்.

தேவா் ஜெயந்தியின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்த ஏதுவாக பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று வீர முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் தேவா் ஜெயந்தி விழாவாக தமிழக அரசால் ஆண்டுதோறும் அக்டோபா் 30-இல் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள், முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனா்.

நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

வெயில், மழையிலிருந்து அவா்களைப் பாதுகாக்கவும், கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கும் தமிழக அரசால் ஒவ்வோா் ஆண்டும் விழாவின்போது நினைவிடத்தின் முன் தற்காலிக கொட்டகை, பந்தல் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிரந்தர மண்டபம் அமைத்துத் தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை அளித்து வருகின்றனா்.

அதை ஏற்று, முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கியப் பிரமுகா்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் என மொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரு மண்டபங்கள் அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com