மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மோசடி.. மின்வாரியம் எச்சரிக்கை

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மோசடி.. மின்வாரியம் எச்சரிக்கை
மின் இணைப்பு துண்டிக்கப்படும் என மோசடி.. மின்வாரியம் எச்சரிக்கை


சென்னை: மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மின் வாரியம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

அண்மையில், மின் கட்டணம் கட்டவில்லை என்றும், மின் இணைப்புத் துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி  அனுப்பி மக்களிடையே மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில், தமிழக மின்வாரியம் வெளியிட்டிருக்கும் எச்சரிக்கையில், 

மின் கட்டணம் கட்டாததால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் 

பதட்டம் அடைய வேண்டாம், உங்கள் மின் கட்டண நிலைப்பாடு சரி பார்க்கவும், மீண்டும் அந்த எண்ணை தொடர்பு கொள்ள வேண்டாம், அவர்கள் பணத்தை அனுப்புமாறு கூறி அனுப்பும் இணைய லிங்கக்கை கிளிக் செய்ய வேண்டாம், உடனடியாக 1930 ஐ அழைத்து புகார் அளிக்கவும் என்று எச்சரித்துள்ளனர்.

மேலும், உங்களுக்குத் தெரிந்ததும் உறவினர்கள், நண்பர்களுக்கும் இந்தத் தகவலை பகிரவும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

ஏனென்றால் இதுபோன்று ஒரு மோசடி மெசேஜ் பலருக்கும் அனுப்பப்பட்டு, அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் மோசடி செய்யப்படுகிறது. இதுபோன்ற குறுஞ்செய்தி வந்தால், http://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம். அல்லது @tncybercrimeoff என்ற டிவிட்டர் பக்கத்திலும் புகார்அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com