அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தில்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!

சனாதனம் குறித்து தாக்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குரைஞர் வினீத் ஜிண்டால் அளித்த புகாரைத் தொடர்ந்து தில்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது தில்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு!


புதுதில்லி: சனாதனம் குறித்து தாக்கி பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குரைஞர் வினீத் ஜிண்டால் அளித்த புகாரைத் தொடர்ந்து தில்லி போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சில விஷயங்களை எதிர்க்க முடியாது, ஒழிக்க தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்ச், மலேரியா, கரோனா போன்றவற்றை ஒழிக்கத்தான் வேண்டும், எதிர்க்க முடியாது. 

அதேபோன்று தான் சனாதனமும். அதை எதிரிக்கக் கூடாது, ஒழிக்க வேண்டும். சனாதனம் சமத்துவத்திற்கும், சமூகநீதிக்கும் எதிரானது. எதுவுமே நிலையானது கிடையாது. அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்கு உருவான இயக்கம்தான் கம்யூனிஸ்ட், திமுக என ஸ்டாலின் பேசினார். இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து உதயநிதி பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், வழக்குரைஞரும், சமூக சேவகருமான வினித் ஜிண்டால் தில்லி காவல்துறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார். 

புகார் மனுவில், இந்தியாவின் 80 சதவிகிதம் பேர் சனாதன தர்மத்தில் நாட்டம் கொண்டவர்கள். இவர்களை இனப்படுகொலை செய்யத் தூண்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அமைந்துள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் மீது இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 153ஏ, 295, மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com