மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)

ஆதித்யா எல் -1 விண்கலத்தின் திட்ட இயக்குநருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு!

ஆதித்யா எல் -1 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 
Published on


ஆதித்யா எல் -1 செயற்கைக்கோள் புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதன் திட்ட இயக்குநர் நிகர் ஷாஜிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் தெரிவித்திருப்பதாவது: 
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.

தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.

இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com