கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது!

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

News image
Updated On :6 செப்டம்பர் 2023, 10:02 am

DIN

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருச்சூர் அடிப்படையிலான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் தமிழ்நாடு, கர்நாடகம் பகுதிகளில் மாறி மாறி தலைமறைவாக இருந்துவந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைதான ஐஎஸ் அமைப்பின் தலைவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏற்கெனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிஃப் என்வரையும் என்ஜஏ அதிகாரிகள் கைது செய்தது. இந்நிலையில், இன்று ஐஎஸ் அமைப்பின் தலைவர் கைதாகியுள்ளார். 

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.