இந்தியாவை மாற்றிக் காட்டிய மோடிக்கு வாழ்த்துகள்: உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவை மாற்றுவதாக சொன்ன மோடி, பாரத் என்று பெயர் பலகையில் மாற்றியுள்ளார் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.


இந்தியாவை மாற்றுவதாக சொன்ன மோடி, பாரத் என்று பெயர் பலகையில் மாற்றியுள்ளார் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவையே மாற்றிக்காட்டுவேன் என்று மோடி சொன்னார். தற்போது ஜி20 மாநாட்டில் பாரத் என பெயர்ப்பலகை வைத்ததன் மூலம், தான் சொன்னதை செய்துவிட்டார்.
இதற்காக அவருக்கு எனது வாழ்த்துகள். என் தலைக்கு ரூ.10 கோடி, அவர் தலையை எடுத்தால் ரூ.100 கோடி, என வருகிறவர் போகிறவர் எல்லாம் தலைக்கு விலை பேசுகிறார்கள். என் மீதான தாக்குதல் தனிமனித தாக்குதல் இல்லை, அது கொள்கை தாக்குதல். ஆட்சி பற்றிக் கவலையில்லை, கொள்கைக்காக நிற்போம் என்றார்.
புது தில்லியில் அமைந்துள்ள பிரகதி அரங்கில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வந்த ஜி20 உச்சி மாநாடு இன்று காலை தொடங்கியது. அரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்திருக்கும் இருக்கைக்கு முன்பு வைக்கப்பட்டிருக்கும் நாட்டின் பெயர் பலகையில் பாரத் என வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...