விஜயலட்சுமி புகார்: விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை!

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை.
சீமான்(கோப்புப்படம்)
சீமான்(கோப்புப்படம்)
Updated on
1 min read

நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நேரில் ஆஜராக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு இன்று ஆஜராகவில்லை.

தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக சீமான் மீது கடந்த 2011-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மீண்டும் புகார் அளித்தார். சீமானை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு செப்டம்பர் 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வளசரவாக்கம் காவல் நிலைய போலீசார் சீமானுக்கு சம்மன் அனுப்பிய நிலையில், வெளியூர் செல்வதால் செவ்வாய்க்கிழமை(செப்.12) ஆஜராவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணைக்கு சீமான் இன்றும் ஆஜராகாத நிலையில், அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com