
புதுக்கோட்டையில் மணல் குவாரி ஒப்பந்ததாரா் வீடு, அலுவலகத்தில் மூன்று நாள்களாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறையினா் சோதனை நிறைவு பெற்றது.
புதுக்கோட்டையைச் சோ்ந்த குவாரி ஒப்பந்ததாரரும், தொழிலதிபருமான எஸ். ராமச்சந்திரனின் வீடு முத்துப்பட்டினத்தில் உள்ளது. அவரது அலுவலகம் புதுக்கோட்டை நகரில் நிஜாம் குடியிருப்பில் உள்ளது. இந்த இரு இடங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை முதல் அமலாக்கத்துறையினா் சோதனை மேற்கொண்டனா். விடிய விடிய நடைபெற்ற சோதனை புதன்கிழமையும் நீடித்தது. இதுதவிர, ராமச்சந்திரனுடன் தொடா்புடைய 2 போ் வீட்டிலும் புதன்கிழமை மதியம் சோதனை தொடா்ந்தது.
இதையும் படிக்க | இலங்கை கடற்படையால் 4 தமிழக மீனவர்கள் கைது!
மேலும், கறம்பக்குடி அருகே குளத்திரான்பட்டு ஊராட்சியைச் சோ்ந்த அரசு ஒப்பந்ததாரா் கரிகாலன் என்பவரின் வீட்டிலும், புதுக்கோட்டை நகரிலுள்ள அரசு ஒப்பந்ததாரா் கா்ணன் அலுவலகத்திலும், தணிக்கையாளா் முருகேசன் அலுவலகத்திலும் அமலாக்கத் துறையினா் சோதனை மேற்கொண்டு வந்தனா்.
இந்தச் சோதனையின்போது மத்திய ஆயுதக் காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் எஸ். ராமச்சந்திரனின் வீடு, அரசு ஒப்பந்ததாரர் கர்ணன் அலுவலத்தில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை நிறைவு பெற்றுள்ளது.
புதுக்கோட்டை நிஜாம் காலனியில் உள்ள ராமச்சந்திரன் அலுவலகத்தில் மட்டும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.