
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்களில் 4 பேரை இலங்கை கடற்படையினர் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு இறங்குதளத்தில் இருந்து 163 விசைப்படகுகள் புதன்கிழமை மாலை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.
இதையும் படிக்க | ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் கைது
இதில், செந்தில் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற அருண், மருது, சுந்தரம், செல்வராஜ் ஆகிய 4 மீனவர்களும் 32 நாட்டிக்கல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக 4 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் 4 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...