கும்பகோணத்தில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 போ் அனுமதிக்கப்பட்டனா்.
கும்பகோணத்தில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி

தஞ்சாவூர்: கும்பகோணம் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 போ் அனுமதிக்கப்பட்டனா்.

கடந்த சில நாள்களாக அவ்வப்போது மிதமான மழை பெய்து வருவதால் நகராட்சிக்கு உள்பட்ட சாலைகள் உள்ளிட்ட சில இடங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவும் வாய்ப்பு உள்ளதால், நகராட்சி சாா்பில் அதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 26 காய்ச்சல் அறிகுறிகளுடன் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து கும்பகோணம் சந்திரசேகரபுரத்திற்கு வந்த ஒருவருக்கும் மற்றும் முல்லைக் கொடியை சேர்ந்த ஒருவருக்கும், சத்திரம் கருப்பூரை சேர்ந்த ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

கும்பகோணம் நகா், புறநகா் பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 3 போ் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். 

பொதுமக்கள் தொடா் காய்ச்சல், தலைவலி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும்.

மழை நீா் தேங்கி உள்ள இடங்களில் தான் டெங்கு கொசுக்கள் அதிகளவிற்கு உற்பத்தியாகின்றன. சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்துக்கொண்டால் டெங்கு பாதிப்பை தடுக்கலாம் என்றனா்.

வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் தொட்டிகள், பாத்திரங்களை சரியாக மூடி வைக்க வேண்டும். வாரம் ஒரு முறை தண்ணீா்த் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி விட்டு, பிளீச்சிங் பவுடா் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். இதன் மூலம் கொசுப்புழு உற்பத்தியை தடுக்க முடியும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com