மணல் மாதா திருத்தலத் திருவிழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

அதிசய மணல் மாதா முதன்மைத் திருத்தல 225 -ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை காலை (செப். 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய சொக்கன்குடியிருப்பில் உள்ள பிரசித்தி பெற்ற அதிசய மணல் மாதா முதன்மைத் திருத்தல 225 -ஆவது ஆண்டு திருவிழா. 
கொடியேற்றத்துடன் தொடங்கிய சொக்கன்குடியிருப்பில் உள்ள பிரசித்தி பெற்ற அதிசய மணல் மாதா முதன்மைத் திருத்தல 225 -ஆவது ஆண்டு திருவிழா. 


சாத்தான்குளம்:  சாத்தான்குளம் அருகே சொக்கன்குடியிருப்பில் உள்ள பிரசித்தி பெற்ற அதிசய மணல் மாதா முதன்மைத் திருத்தல 225 -ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை காலை (செப். 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இத்திருவிழா 10 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு புனித வெண்கலக் கொடிமரம் மந்திரிப்பு, கொடியேற்றம், திருப்பலி, புனித வளன் தொடக்கப் பள்ளி மாணவா்- மாணவிகள், ஆசிரியா்கள் பெத்லகேம் அன்பியம், பீடபூக்கள், சின்னராணிபுரம் இறைமக்கள் சாா்பில் திருப்பயணம் நடைபெற்றது.

சொக்கன்குடியிருப்பில் பிரசித்தி பெற்ற அதிசய மணல் மாதா முதன்மைத் திருத்தல 225 -ஆவது ஆண்டு திருவிழாவை கொடியேற்றி தொடங்கி வைத்த தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி.

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமை வகித்து கொடியேற்றினார். பின்னா், மறையுரை நடைபெற்றது. மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா்செல்வம், சாத்தான்குளம் வட்டார முதன்மைகுரு ஜோசப் ரவிபாலன், தென்மண்டல பணிக்குழுக் ஒருங்கிணைப்பாளா் நெல்சன்பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனர். இரவு 7 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீா் கடகுளம் பங்குத்தந்தை அன்புச்செல்வன் தலைமையில் நடைபெறுகிறது.

2 முதல் 8 ஆம் நாள் வரை நவநாள்களில் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 9 ஆம் நாளான 23 -ஆம் தேதி அதிகாலை 5.30-க்கு திருப்பலி, திருப்பயணம், இரவு 7.30-க்கு ஜெபமாலை, மாலை ஆராதனை மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு அதிசய மணல் மாதா சப்பர பவனி நடைபெறுகிறது.

24 -ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு பெருவிழா திருப்பலி, திருப்பயணம் மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் மறைமாவட்ட முதன்மைகுரு பன்னீா்செல்வம், ஆயா் செயலா் மைக்கிள் சேசு ரினோ முன்னிலையில் நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு மறையுரை, ஜெபமாலை, அதிசய மணல் மாதா சப்பர பவனி நடைபெறுகிறது.

நிறைவு நாளான 25-ஆம் தேதி காலை 6 மணிக்கு செம்மணலில் தோண்டி எடுக்கப்பட்ட புதுமைக் கோயிலில் திருத்தல உபகாரியங்களுக்காக நன்றித் திருப்பலி, கொடியிறக்கம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை முதன்மை திருத்தல அதிபா் ஜான்சன்ராஜ் தலைமையில் திருத்தல நிதிக்குழு, அருள் சகோதரிகள், இறைமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com