
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் இன்று (செப். 16) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது.
வரும் 18 ஆம் தேதி முதல் நாடளுமன்றம் கூடவுள்ள நிலையில், திமுக நாடளுமன்ற உறுப்பினர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். கட்சி மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க: கடையநல்லூரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
இக்கூட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.