தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அயோத்தியாபட்டினம் அருள்மிகு கோதண்டராமசாமி கோயில் புதிய தேர் வெள்ளோட்டம்

சேலம் அயோத்தியாபட்டினம் அருள்மிகு கோதண்டராமசாமி கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

News image
அயோத்தியாபட்டினம் அருள்மிகு கோதண்டராமசாமி கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் விழா
Updated On :17 செப்டம்பர் 2023, 12:23 pm

DIN

சேலம்: சேலம் அயோத்தியாபட்டினம் அருள்மிகு கோதண்டராமசாமி கோயிலின் புதிய தேர் வெள்ளோட்டம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனா்.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோயில் தேர் திருவிழா பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே இருந்த தேர் பழுதானதால் கடந்த 60 ஆண்டுகளாக தேர் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.

இதையடுத்து இந்து சமய அறநிலைத்துறை சார்பில் புதிய செப்பனிடப்பட்டது. தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கழமை திருதேர் வெள்ளோட்ட விழா நடைபெற்றது 

இந்த திருதேர் வெள்ளோட்ட விழாவில் அந்த பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கத்துடன் தேரை பக்தா்கள் வடம் பிடித்து இழுத்தனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.