இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.79 கோடியில் 1,591 குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறப்பு

வேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். 
இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.79 கோடியில் 1,591 குடியிருப்புகள்: மு.க.ஸ்டாலின் திறப்பு

வேலூர் மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டப்பட்ட வீடுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். 

வேலூரில் ரூ. 11 கோடியில் 220 குடியிருப்புகளை பயனாளிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இலங்கைத் தமிழர்களுக்காக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.

தமிழகத்திலுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 நவம்பர் மாதம் வேலூர் அருகே மேல்மொணவூர் முகாமில் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ரூ.142.16 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இதில், தற்போது 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகள் திறப்பு விழா வேலூர் மேல்மொணவூர் முகாமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தமிழகம் முழுவதும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 வீடுகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததுடன், மேல்மொணவூர் முகாமில் ரூ.11 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 220 வீடுகளுக்கான சாவிகளையும் பயனாளிகளிடம் வழங்கினார்.

மேலும், தமிழகத்தின் அனைத்து இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள் குறித்த புகைப்படத் தொகுப்பினையும் பார்வையிட்டதுடன், முகாமில் வாழும் மக்களையும் நேரில் சந்தித்தார்.

முன்னதாக, பெரியார் ஈவெரா-வின் 145ஆவது பிறந்தநாளையொட்டி வேலூர் அண்ணா சாலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலுள்ள பெரியார் ஈவெரா சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் துரைமுருகன், ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், செஞ்சிமஸ்தான், ஆர்.காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், கலாநிதி, டி.எம்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலுவிஜயன், மாநகராட்சி மேயர் சுஜாதாஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com