92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நீர் திறக்கப்படுகிறதா? காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும்!

தமிழகத்துக்குத் தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிடுகிறதா என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :18 செப்டம்பர் 2023, 2:56 pm

DIN


தமிழகத்துக்குத் தேவையான நீரை கர்நாடக அரசு திறந்துவிடுகிறதா என்பதை காவிரி மேலாண்மை ஆணையம் கண்காணிக்க வேண்டும் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

காவிரி விவகாரம் தொடா்பாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தலைமையில் தமிழகத்தைச் சோ்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு தில்லி சென்றுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், காவிரி மேலாண்மை ஆணையம் கண்களை மூடிக்கொண்டு நீரைத் திறந்துவிட கர்நாடகத்துக்கு உத்தரவிடுகிறது. ஆனால், எத்தனை அணைகள் அங்கு உள்ளன, அதில் எவ்வளவு தண்ணீர் உள்ளது என்பதை ஆய்வு செய்து அவர்கள் உத்தரவிட வேண்டும். காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்துவருகிறது எனக் குறிப்பிட்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.