திறப்புவிழாவுக்கு கூட குடியரசுத்தலைவர் அழைக்கப்படாத கட்டடத்தை நோக்கி செல்லவிருக்கிறோம் என மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து பிரதமர் மோடி, அமைச்சர்கள், எம்.பி.க்கள் அனைவரும் இன்று(செவ்வாய்க்கிழமை) பிற்பகல் புதிய நாடாளுமன்றத்திற்கு இடம்பெயர்கின்றனர். இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் இரு அவைகளும் செயல்பட உள்ளன.
இதையும் படிக்க | கேரளத்தில் 4-வது நாளாக நிபா வைரஸ் பாதிப்பு இல்லை!
இந்நிலையில் இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. சு. வெங்கடேசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில்,
'இன்னும் சிறிது நேரத்தில்….
86 முறை இந்திய குடியரசுத்தலைவர்கள் உரையாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க நாடாளுமன்ற கட்டிடத்திலிருந்து,
திறப்புவிழாவுக்கு கூட குடியரசுத்தலைவர் அழைக்கப்படாத கட்டிடத்தை நோக்கி செல்ல இருக்கிறோம்' என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.